Sunday, March 7, 2010

பணிவு

பணிவு

ஒரு மாணவனாக எனது முதல் பதிவை தொடங்குகிறேன்.......


ஒரு மாணவன் தனது இலக்கை அடைவதற்க்கு ஒரு சாதனையை நிகழ்த்த என்ன தேவை எண்டு யோசிச்சன். அது தான் இந்த பதிவு, இது எனக்குள் ஏற்ப்பட்ட ஒரு சிறிய எண்ணம் மாத்திரமே, யாருக்கும் அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல வெளிக்கிடவில்லை. சத்தியமா நம்புங்கோ.

எனக்கென்னவோ பணிவு தான் ஒரு மாணவனுக்கு மிக மிக முக்கியம் எண்டு நினைக்கிறன். நல்ல பண்புகள் என்று சமுதாயத்தில் வரையறுக்க பட்ட சில செயல்களின் சிகரமாக விளங்குவது பணிவு தான்.

பிளேட்டோவின் பணிவு தான் அவரை ஒரு வரலாற்று நாயகராக வலம் வர உதவியது. கிரேக்க மேதை சாக்ரடீசின் மாணவன் தான் இந்த பிளேட்டோ. சாக்கிரடீசின் படைப்புகளை வெளிக்கொணர்ந்தது இந்த பிளேட்டோ தான், ஒரு உயர்தர செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர், ஆனாலும் அந்த ஆணவம் எதுவும் இல்லாமல் மிகுந்த பணிவுடன் சாக்கிரடிசின் சிந்தனைகளை செவிமடுத்ததால் தான் அவரால் ஒரு சிறந்த மாணவனாக விளங்க முடிந்தது. இன்று உலகம் போற்றும் ஒரு மேதையாக திகழுகிறார்.

அவரது முத்தான தத்துவங்கள் சில

1. பூமிக்கு அடியிலும் மேலேயும் கொட்டிக்கிடக்கும் தங்கங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதை ஒரு நல்லொழுக்கத்திற்கு மாற்றீடாக தர முடியாது.

2. எந்த ஒரு மனிதனாலும் இலகுவாக கேடு விளைவிக்க முடியும், ஆனால் ஒரு நற்செயலை செய்ய எல்லோராலும் முடியாது.

3. வாழ்வில் சந்திக்கும் அனைவருடனும் அன்பாக பழகுவது என்பது கடுமையான போர்க்களத்தில் சண்டை செய்வது போன்று கடினமானது.

4. எவன் முதலில் தன்னை தானே வெற்றி கொள்கிறானோ அவனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவிக்க முடியும்.

5. சிறந்த பணியாளனாக இருக்க முடியாதவன் நிச்சயமாக ஒரு நல்ல எஜமானாக வரமுடியாது.

6. ஆசை, அறிவு, உணர்ச்சி ஆகிய மூன்று அடிப்படை செயல்களில் இருந்து தான் தான் மனித நடத்தை உருவாகிறது.

7. புறக்கணித்தல் என்பது ஒரு தீய செயலை உருவாக்கும் வேர் போன்றது.

8. எமது நல்ல நடவடிக்கைகள் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும், அதுவே மற்றவர்களுக்கு ஒரு நற்செயல் செய்வதற்க்கான ஊக்கத்தை தரும்."

பணிவு பணிவு பணிவு இதை உயிர்மூச்சாக கொண்டு தேடிக்கற்றுக்கொள்ளும் மாணவர்களே சாதிக்கிறார்கள், நான் பார்த்த பழகிய கேள்விப்பட்ட பலபேர் சாதிச்சது இப்படித்தான், மீண்டும் நம்புங்கோ. ஆனால் இது மட்டும் தனித்து ஒரு மாணவன் முன்னேற காரணமாக அமையாது, இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறவந்தேன். சரி சரி சும்மா எதோ வம்பு அளக்க வெளிக்கிட்டு பண்பு எண்டு வாயிலை வந்துட்டு அன்பர்களே.

மேலும் ஜோ.ஷாம்சன் என்பவர் எழுதிய விழி! எழு! வெற்றிபெறு! எனும் புத்தகத்தில் இருந்து

"பதவி உயர்ந்தாலும் பணிந்து நடக்க வேண்டும்
படிப்பு உயர்ந்தாலும் பார்த்து நடக்க வேண்டும்
அறிவு உயர்ந்தாலும் அடக்கி ஆள வேண்டும்
அகிலமே உயர்ந்தாலும் அமைதி காக்க வேண்டும்"


" மாணவனே! நீ பணிவுள்ளவனாக இரு - சிகரத்தை தொடு"

2 comments:

  1. அகல்யன் அவர்களே, உங்களுடைய இந்த புதிய முயற்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்...இது உங்களுடைய ஆக்கத்திறமையையும், எழுத்து திறமையையும் வெளிக்கொணர நல்லதொரு சந்தர்ப்பம் என்று நினைக்கின்றேன்....மேன்மேலும் உங்களுடைய எல்லா முயற்சிகளிலும் நீங்கள் வெற்றிவாகை சூட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக !!!

    ReplyDelete
  2. SSRAGA அவர்களே உங்களின் வாழ்த்துகளிற்க்கு எனது மனமார்ந்த நன்றி. என்னால் முடிந்தவரையில் இதைவிட மேலும் சிறப்பாக செயல்பட முயற்ச்சி செய்கிறேன் அதற்க்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன். மற்றும் நிறையை விட குறையை சுட்டி காட்டும் அதிகாரமும் உங்களுக்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.

    ReplyDelete